Skip to main content

Posts

Showing posts from February, 2022

பவானி நதியை அழிக்கத் தொடங்கியிருக்கும் சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகள்...

       கோவனூர் பள்ளத்தாக்கின் நீர்ப்பிடிப்புப் பகுதியானது பவானி நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு புதிதாக சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகள் தொடங்கப் பட்டிருக்கின்றன. இதனால் இந்தப் பள்ளத்தாகின் நீர்ப்பிடிப்புப் பகுதியும், அதை சார்ந்த அனைத்து வாழ்வியல் வெளிகளும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றன. தடாகம் பள்ளத்தாக்கில் இதுவரை சங்கனூர் ஆற்றைச் சூறையாடிய நபர்களே நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்குப் பயந்து அருகில் உள்ள கோவனூர் பள்ளத்தாக்கில் தங்கள் சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகளைத் தொடங்கியுள்ளார்கள். இந்த நடவடிக்கையை அரசு முளையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல், பவானி நதியை வேளாண் பணிகளுக்காக நம்பியிருக்கும் உழவர் பெருமக்களும், குடிநீருக்காக நம்பியிருக்கும் லட்சக்கணக்கான மக்களும், உயிரினங்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

வறட்சியும், நூற்றாண்டுகால வனச் சட்டங்களும்

  சாந்தலா வறட்சியும் வெள்ளமும்   தமிழ்நாட்டின் தலைவிதி என்பதே இன்றைய நிலை . கடுமையான வறட்சிதான் விதி என்றாலும் கூட தமக்குக் கிடைக்கும் மழை அளவிற்கு ஏற்றவாறு இஸ்ரேல் போன்ற நாடுகளின் அரசுகள் தம் நாட்டின் நீர் ஆதாரத்தைக் கைகொள்ளும் நடைமுறைகளை உருவாக்கிக்கொண்டன . மத்திய கால ராஜஸ்தானிலும் இதுபோன்ற அற்புதத் தகவமைப்புகள் நடந்தேறின . ஆனால் கடந்த அரை நூற்றாண்டின்போது வறட்சியாலும் வெள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பினும் தனது நீர்பிடிப்புப் பகுதிகளுடனும் நீர் வழித் தடங்களுடனும் தமிழக அரசு தான் கொண்டிருக்கும் உறவினை மாற்றி அமைத்துக் கொள்ளவில்லை . அதற்குத் தேவையான பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை . தமிழகத்தை இன்றுவரை நிர்வகித்த அரசியல் கட்சிகளோ இதற்கான எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை . இதனை மாற்றுவதற்கு இனியாவது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் .  தமிழ்நாட்டின் குறிஞ்சி நிலமும் , நவீன கால அரசுகளின் நடவடிக்கைகளும் 1800 ஆம் ஆண்டிலிருந்து 1947 வரை தமிழகத்தை ஆங்கிலேயர்கள் ஆண்டனர் . ஆங்கிலக் கிழ...