எனது “Stuck in the Days of Abundance: The Strange Case of Streams at Thadagam Valley” புத்தகத்திற்கு உலக சூழலியல் நிபுணரும், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் முன்னாள் இயக்குனருமான பேராசிரியர் பி.ஏ.அஜீஸ் அவர்கள் அளித்துள்ள முன்னுரை:
சுற்றுச் சூழல் மீது மனிதனால் தினிக்கப்பட்ட மாற்றங்கள் மற்றும் அவற்றால் உருவாகியுள்ள விளைவுகள் குறித்த மற்றுறொரு புத்தகம் அல்ல இது. மனித நேயம், தேடுதல் மற்றும் உள்ளுணர்வு கொண்ட இளம் பெண் ஒருவர் தன்னைச் சுற்றியுள்ள சமூகவியல் மற்றும் சூழலியல் பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்து அதன் இன்றைய நிலைக்கான காரணங்களை வெளிக்கொண்டு வர எழுதிய புத்தகமே இது. கடந்த பல ஆண்டுகளாகத் தன்னைச் சுற்றியுள்ள நிலம் எப்படிப்பட்ட மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது என்பதனைக் கூர்ந்து கவனித்துவந்த அவரை அன்மையில் வந்த மழை நிகழ்வுகள் இந்தப் புத்தகத்தினை எழுதத் தூண்டியுள்ளன. உள்ளுர் நில வெளியானது எப்படிப்பட்ட கொடூரமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதனை அவர் இந்தப் புத்தகத்தில் மிகவும் நிதானமாகவே முன்வைக்கின்றார்; எனினும், வரவிருக்கும் நாட்கள் குறித்து அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்; மாற்றத்துக்குள்ளாகியிருக்கும் தன்னைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கினை அதன் முந்தைய சூழலியல் நிலைக்குக் கொண்டு செல்கின்ற புத்துயிர் அளிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடத் துடிக்கும் அவர், நம்பிக்கை நிறைந்த உறுதிமிக்க ஒரு இள...