சாந்து 29/08/2022 நொய்யல் நதியின் முக்கியத் துணை நதியாக , காட்டாற்று வெள்ளத்தினைத் தன் தன்மையெனக் கொண்டு பல நூறு கோடி ஆண்டுகளாகக் கொங்கு மண்ணில் உருண்டோடி அதனைச் செழிப்புக்குள்ளாக்கி வந்த சங்கனூர் பள்ளமானது , மானுட இனத்தைச் சார்ந்த ஒரு சிலரின் பேராசை நோயால் தாக்கப்பட்டு வெறும் 25 ஆண்டுகளில் முழுமையாக முடமாக்கப் பட்டுள்ளது . 1957 ஆம் ஆண்டின் மத்திய அரசின் சுரங்கம் மற்றும் கனிம சட்டம் (Mines and Minerals (Development &Regulation) Act, 1957), 1959 ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் சிறுகனிமங்களுக்கான சலுகை விதிகள் (Tamil Nadu Minor Mineral Concession Rules, 1959), மத்திய அரசின் 1977 ஆம் ஆண்டின் தண்ணீர் ( மாசுபாட்டுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ) தீர்வைச் சட்டம் (The Water (Prevention & Control of Pollution) Cess Act,1977), 1981 ஆம் ஆண்டின் மத்திய அரசின் காற்று ( மாசுபாட்டுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ) சட்டம் (Air (Prevention and Control of Pollution) Act 1981), மத்திய அரசின் 1986 ஆம் ஆண்டின் சுற்றுச்...