Skip to main content

Posts

Showing posts from July, 2022

பேராசையால் தூசியாய் போன தடாகம் பள்ளத்தாக்கு

சாந்து 29.07.2022 நீரோடைகளின் வெள்ளத்திற்கும் , மஞ்சள் சோளத்திற்கும் , வன விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கும் காலம் காலமாக அழியாப் புகழைப் பெற்றிருந்த தடாகம் பள்ளத்தாக்கு , இன்று சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகளால் சூரையாடப்பட்டு , முற்றும் முழுதுமாக சீரழிக்கப் பட்டிருக்கிறது .  கோவை மாநகரத்தை வரலாற்று ரீதியாக உலுக்கிய இயற்கைப் பேரிடர் நிகழ்வுகள் இரண்டு . 1900 அம் ஆண்டு , பிப்ரவரி 8 ஆம் தேதி அதிகாலை மணி 3:11- க்கு கோவை மாநகரைத் தாக்கிய 6 ரிக்டர் சக்தி கொண்ட பூகம்பமும் , 1710 ஆம் ஆண்டு தடாகம் பள்ளத்தாக்கில் இருந்து வரும் சங்கனூர் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குமே அவை .  கோவை மாநகரை வட கிழக்கு - தென்மேற்கு என்று இரண்டாகப் பிரிக்கும் சங்கனூர் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அதன் தாழ்வான கரையில் அமைந்திருந்த கிருஷ்ணராயபுரம் என்ற கிராமம் ( கோவை மாநகரத்தின் இன்றைய நவ இந்தியா பகுதி ) அடியோடு அழிந்து போனது . அதில் வாழ்ந்திருந்த மக்கள் அங்கிருந்து குடி பெயர்ந்து 1711 ஆம் ஆண்டில்...