சாந்து 19.09.2022 “ இந்தியாவின் ஒட்டுமொத்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கான வரைபடத் தொகுப்பை ” (Watershed Atlas of India) மத்திய வேளாண் துறை 1990 ஆம் ஆண்டில் வெளியிட்டது . நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பகுதியை 6 நதி மூலாதாரப் பிராந்தியங்கள் (River Resource Region) , 35 வட்டகைகள் (Basin), 112 பெரு நீர்ப்பிடிப்புகள் (Catchments), 550 துணை - பெருநீர்ப்பிடிப்புகள் (Sub Catchments) மற்றும் 3257 நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக (Watersheds) அது பகுத்தது . 1A2B3 என்பது போன்ற குறியீட்டினை இவற்றிற்குக் கொடுத்தது . இதில் 1 என்பது நதி மூலாதாரப் பிராந்தியத்தையும் , 1A என்பது வட்டகையையும் , 1A2 என்பது பெருநீர்ப்பிடிப்பையும் , 1A2B என்பது துணை - பெருநீர்ப்பிடிப்பையும் , 1A2B3 என்பது நீர்ப்பிடிப்புப் பகுதியையும் நீர்நிலைப் படிநிலையின் அடிப்படையில் குறிப்பிடுகின்றது . இத்தோடு நிற்காமல் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் துணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளாகவும் (sub watershed), துணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள் நுண்நீர்ப்பிடிப்புப் பகுதிகளாகவும் (microwatersheds) பக...